மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நண்பர்கள் மூலம் திடீர் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. சுயதொழில் நினைத்ததை அடைவதில் செய்யும் முயற்சி கைகூடும். சுபகாரியத் தடைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறுதியான மனப்பான்மை இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறு முடிக்க கூடுதல் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்த செயலுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரித்து காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் சற்று பொறுமையுடன் யோசித்து செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பரிசுகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. திடீர் அதிர்ஷ்டம் கதவை தட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைபட்ட காரியங்கள் எளிதாக முடிய கூடிய வகையிலான அமைப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உறுதியாக உங்கள் முடிவில் இருப்பது நல்லது. மற்றவர்கள் உங்களை திசை திருப்ப முயற்சி செய்வார்கள் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தால் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்க நேரலாம் எனவே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பக்தி மார்க்கம் பக்கம் மனம் செல்லும்.
கன்னி:
கன்னியை பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் யோகமுண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நற்செய்தி கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய விடாப்பிடியான கொள்கைகளை சற்று தளர்த்திக் கொள்வீர்கள். தேவையற்ற அவமானங்கள் வரக்கூடும் என்பதால் நேர்மையில் இருந்து தவறாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர புதிய யுத்திகளை கையாளுவது நல்லது
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சில தடங்கல்களை சந்தித்து பின் வெற்றியை அடைய போகிறீர்கள். எதிலும் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குழப்பங்கள் தீர்ந்து தெளிவாக சிந்திக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற மன பயம் தீரும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு விமர்சனங்களையும் தாண்டி உங்களுடைய உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய மரியாதையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி மனைவி உறவுக்கு இடையே தேவையற்ற விரிசல் விழாமல் இருக்க முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணிவு தேவை. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் கூடுதலாக சுமக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் எதையும் கையாளுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.