மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காட இருக்கிறீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களின் மேல் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சுயநலமாக இல்லாமல் பொதுநலமாக சிந்திப்பது ஏற்றம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பேச்சு வார்த்தைகள் வீண் பழிகளை ஏற்படுத்தலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் காணப் போகிறீர்கள். குடும்பத்தில் இருக்கும் சுப காரிய தடைகள் விலகி மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் தேவை. தேவையற்ற கோபத்தை தவிர்த்து சாதுரியமாக சிந்திப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்து காட்ட கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரத்து உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆலோசனை சரியெனப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அரசு வழி காரியங்கள் அனுகூலமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் உங்களுடைய திறமைகள் வெளி வரக் கூடும். கூடுதல் உழைப்பைக் கொடுத்து முன்னேற்றத்தைக் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் உயர்வதற்கான வழிகளை பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். மற்றவர்களுடைய சுயரூபத்தை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் தோன்றி மறையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உற்றார், உறவினர்கள் உடைய ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பெரிய சிக்கல் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. சக பணியாளர்கள் உடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமான உயர்வு ஏற்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும். புதிய இலக்குகளை நோக்கி பயணம் செய்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். உங்களை சுற்றி இருக்கும் நட்பு வட்டம் விரியும். ஆரோக்கியம் கூடுதல் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட இரட்டிப்பு பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லா தடைகளும் நீங்கி வெற்றி வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த செயல் ஒன்று முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது வரை வசூலாகாத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய எதிர்பார்ப்பின் படி சலுகைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். குடும்பத்தில் புதிய வரவினால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் தைரியம் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடந்த பனிப்போர் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் எனவே வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறு சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கத்துடன் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்