மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிரடியான சில மாற்றங்களை நிகழ்த்த கூடிய எண்ணம் மேலோங்கும். போட்டிகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதியான மனநிலை உருவாகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உயர்வை அடையக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சக போட்டியாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறுவீர்கள். புதிய கத்தில் இருப்பவர்களுக்கு தன்னிச்சையாக செயல்படக் கூடிய தைரியம் பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் லாபகரமான முடிவுகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதில் இருக்கும் தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு புது உத்வேகம் பிறக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் பணியில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் பல வேலைகளை இழுத்துபோட்டு செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். தேவையற்ற அலட்சியம் சில இழப்புகளை உண்டுபண்ணும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகிப்புத் தன்மையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையில் இருப்பீர்கள். புதிய யுத்திகளை கையாளுவதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற நபர்களின் வார்த்தைகளை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புடன் செயல்படுவது நல்லது. மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வீண் அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது உத்தமம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் போராடி பெறக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தை பார்ப்பவர்கள் முன்னேறுவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். அடுத்த கட்ட முடிவுகளை பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர் ஒருவரை பார்க்க கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் அனுபவ அறிவாற்றல் சில இடங்களில் உதவிகரமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பொறுப்புகளை அறிந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும். கடினமான முயற்சியால் வெற்றி அடையக்கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய மனிதர்களுடைய உதவிகளை நாடி செல்வீர்கள். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் மறுசீரமைப்பு பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் பணவரவு மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். புதிய பாதையை காணக்கூடிய சில சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டாகும். புதிய முயற்சி வெற்றி தரும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்கி தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை ஏமாற்றியவர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்கிற உத்வேகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் யோசிக்கக்கூடாது. குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.