மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது உத்வேகத்துடன் செயல்பட இருக்கிறீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் லாபமும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இழந்த ஆதரவு மீண்டும் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுயமாக முடிவெடுக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுக்கக்கூடிய முடிவுகளில் இருந்து பின்வாங்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுடைய பங்களிப்பு அதிகம் இருப்பது அவசியமாகும். உங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் உங்களை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சிந்திப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயலாற்ற கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தொட்டதெல்லாம் வெற்றி அடையும் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைபட்ட இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகைவர்களின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே எதிர்பாராத பிரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனத் தெளிவு தேவை. ஆரோக்கியத்தில் மாற்றம் காணப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவீர்கள். எதிர்வரும் எவ்வளவு பிரச்சினைகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை உங்கள் மேல் அக்கறை கொள்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் ஒரு ஆர்வம் தென்படும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை விட செலவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினை ஆக்கும். கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பல இடங்களில் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். உங்களுடைய இரக்க சுபாவம் நன்மைகளை கொடுக்க இருக்கிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. தொலைதூர போக்குவரத்தின் கவனமுடனிருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் தேவையற்ற பயம் எழக்கூடும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முற்போக்கு சிந்தனை வெற்றியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உறுதியாக முடிவுகளை எடுப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் குழப்பம் வேண்டாம். தடைகளை தகர்த்து எறிந்து லட்சிய பாதையை நோக்கி பயணிக்க கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களால் முடியாத விஷயம் கூட முடித்துக் காட்ட கூடிய அற்புதமான நாளாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு அவசியமாகும். அதிக உடல் உழைப்பு ஆரோக்கியத்தை பாதிக்கலாம் எனவே கவனமாக இருந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனம் பெருகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.