மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நன்மை அளிக்கும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய உணர்வுககளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்துடன் வெளியிட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றி உள்ளவர்கள் உடைய சுயரூபத்தை காணக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கற்பனை வளம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செய்த புண்ணியத்திற்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்வது நல்லது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் பாக்கியம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். அதுவரை பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவு கொண்டு செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்கள் விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பண விஷயத்தில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை மேற்கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொல் பேச்சை மற்றவர்கள் கேட்கும் படியான அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மாற்றம் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. மனநிலையில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான தீர்ப்பு வருவதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உடல் நிலையில் கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பலவீனத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். எதையும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து முடிவெடுங்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்க கூடும். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதை தனி ஆளாக நின்று சமாளித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கனவுகள் தடையில்லாமல் நிறைவேறும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு இடையூறுகள் பல வகைகளில் வந்து சேர வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கக் கூடும் எனவே ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்ட கூடிய இனிய நாளாக இருக்கிறது. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.