மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இயந்திரம் போல சுழன்று கொண்டிருக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. வேலை பளு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழிலில் திருப்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியான நாளாக அமையப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய சொத்துக்களை வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலைகள் குறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழில் செய்பவர்கள் பிரயானங்களின் பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வாயை கட்டுப்படுத்துவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்ககளுக்கு இழுப்பறியில் இருந்த பண வரவு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயலில் சறுக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் தீர்வுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சகோதரர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு இருக்காது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை மெருகேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு புதிய நம்பிக்கை மலரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறாமல் பொறுப்புடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பழைய நினைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதக பலன் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத மாற்றம் பிரச்சனைகளை உண்டு பண்ண வாய்ப்பு உண்டு. சுயதொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்கள் திடீர் பயணங்களால் சோர்வு அடைய வாய்ப்பு உண்டு. திட்டமிட்ட செயல்கள் சிதறாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செலவுகளால் நெருக்கடிகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுபவம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிறு சிறு விஷயங்களில் கூட முன்கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வீண் ஆசைகளை தவிர்ப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. நெருக்கமானவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன்னாடி யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும்.