மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வருவது இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற மனக் குழப்பங்களை ஏற்படுத்தும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் பெருகும். குடும்பத்தில் இருந்துவந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் தீர பொறுமை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனோதிடம் அதிகரிக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி தரும் சிந்தனைகள் மேலோங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு செயலில் வேகம் இருக்கும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் எதிலும் வெற்றியை காண கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது ஆலோசனை தேவை. அவசரத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பு கள் உண்டு என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆத்ம பலம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். எதையும் சாதிக்க முடியும் என்கிற உத்வேகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகள் வெற்றி பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனக் குழப்பங்கள் ஏற்பட்டு மறையலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கவனம் தேவை நீங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறைந்து பெருமூச்சு விட கூடிய வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். தொடர்ந்து உங்களுடைய முயற்சியை கொடுத்துக் கொண்டு இருப்பது உத்தமம். தொழில் ரீதியான ரகசியங்களை மூன்றாம் நபர்களிடம் கூறுவது அவ்வளவு நல்லதல்ல. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறுசிறு ஊடல்கள் நீங்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். பொருளாதார ரீதியான விஷயங்களில் ஏற்றம் காணப்படும் என்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை தேவையற்ற வார்த்தைகளை வீசும் கவனம் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பாராத சலுகைகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானம் தேவை. முன் கோபம் உங்களை சுற்றி இருப்பவர்களை மட்டுமல்லாமல் உங்களையும் மனநிம்மதியை இழக்கச் செய்துவிடும் என்பதை உணர்ந்து செயல்பட கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கே வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. பணம் கொடுத்து ஏமாருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நிர்வாகத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேச்சில் இனிமை இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் திட்டங்கள் நிறைவேறும் ஒரு புதிய வெளிச்சம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடும் பிரச்சனைகள் வந்தாலும் அதை எளிதாக சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்கும் தன்மை இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் நீங்கள் வெற்றியை காணப்போகிறீர்கள். மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.