மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தாங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் தங்கள் பக்க நியாயங்களை மற்றவர்களுக்கு புரிய வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். பொறுமை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். வாகன ரீதியான தேவையற்ற வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது உத்தமம். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் அமைதி தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடிய நாளாக இருக்கிறது எனினும் கூடுமானவரை மற்றவர்களுடைய பேச்சில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே பொறுமை தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படி நடக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெற்றவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரம் சீராகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்க கூடிய நாளாக இருக்கிறது. உங்களுடைய விடா முயற்சிக்கும் உரிய வெற்றியைக் காணலாம். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத வகையில் அனுகூலமான பலன்களை காணலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் மதிப்புடன் நடத்த கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சொன்ன வாக்கை காப்பாற்ற கூடிய எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அமைப்பு உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என்பதால் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பெரிய தொகையை எதிலும் ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய நட்பு வட்டம் அனுகூல பலன் தரும் வகையில் அமைந்திருக்கிறது. சுய தொழிலில் ஏற்றம் காணும் நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற கோபங்கள் மூலம் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இலாபத்தை அதிகரித்துக் காட்ட கூடிய வகையிலான அமைப்பு என்பதால் விடா முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த போட்டிகளை விலக்கிக் கொள்வீர்கள். பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கும். சமூக அக்கறை அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இனிமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வது உத்தமம். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. பழைய நினைவுகளை அசைபோட்டு பார்ப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்கள் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பெரிய தொகையில் கவனம் தேவை. வெளியிட போக்குவரத்துகள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.