மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகிறது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிய கனவுகள் ஈடேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது புத்துணர்வு பிறக்கும். சுப காரிய தடைகள் விலகி வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்த வரன் அமைய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொது காரியங்களில் ஈடுபடுவதற்கு சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமையை கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிடுக்காக மிளிர வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் நினைத்தவற்றில் லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் பரஸ்பர ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தவை தாமதமாகாமல் நடக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைவதில் இடையூறுகள் இருக்கலாம் எனவே நிதானத்தை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகளை பெறுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் பல்வேறு விதமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன் கோபம் ஏற்படும் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே விரிசல் வரலாம் அனுசரித்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனித்திறமைகளுக்கு மதிப்பு உண்டாகும், எதையும் சிந்தித்து முடிவெடுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் தரப்பு நியாயங்களை தைரியமாக முன் வைப்பீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்களில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. வம்பு வழக்குகளில் சாதக பலன் கிட்டும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க கூடிய நாளாக இருப்பதால் பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும் எனவே அலட்சியம் காண்பிக்க வேண்டாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகள் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் செலவுகள் வரக்கூடும் கவனம் தேவை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.