மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான விஷயம் கூட கடினமாக தெரியும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான சிக்கல்களை திறம்பட சமாளிக்கும் தைரியம் பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களும் மூலம் அனுகூல பலன் கிட்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவனம் எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி அடைய விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தேவையற்ற வாதங்கள் தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதான போக்கு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தினருடன் தேவையற்ற வம்பு வழக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் தேவை. உபயோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நண்பர்கள் காலை வருகிற வாய்ப்புகள் உண்டு. கவனமுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செல்வாக்கு உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுய முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் தடைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமை தர கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு பண வரவு இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். நினைத்தது நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் பயணங்களில் கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நினைத்ததை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவதில் சிக்கல் தொடரும். வெளிநாடு விசயத்தில் சாதக பலன் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபயோக பலன்கள் தர கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த கடன் வசூலாகும் யோகம் உண்டு. விவேகம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் ஏற்றம் காணலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்க போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் புதிய உத்திகளை செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிசுமை கூடும் என்பதால் டென்ஷன் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சலிக்காமல் போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட் சேர்க்கை ஏற்படலாம். முன் பின் தெரியாத நபர்களின் அறிமுகம் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதுவும் செய்யாதீர்கள். கணவன் மனைவி இருவரும் இணைந்து முடிவுகள் எடுக்க வேண்டும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கையில் பணம் அதிகம் புழங்கும்.