மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியை தரும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும். தாய்மாமன் வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலையில் கொஞ்சம் கவனம் தேவை. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களிடம் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தை நாளை வைத்துக்கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க போகின்றது. அடுத்தவர்களுக்கு கொடுத்த வேலையைக் கூட இழுத்துப்போட்டு நீங்கள் உற்சாகமாக செய்யப் போகிறீர்கள். அந்த அளவிற்கு ஆற்றல் மிகுந்த இனிய நாள் தான் இது. பெயர் புகழ் உங்களை தேடிவரும். –
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாகத்தான் இருக்க போகின்றது. நீங்களே எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் உங்களை தேடி வரும். உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஆதரவாக நிற்பார்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையாக சிந்தித்தால் வெற்றி உங்களுக்கே.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தி அடையும் நாளாக இருக்கப் போகின்றது. வாராக் கடன் வசூலாகும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்னச் சின்ன சங்கடங்கள் கொடுக்கக்கூடிய நாளாகத்தான் இருக்க போகின்றது. நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லதே போய் செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். வீதியில் யாரேனும் சண்டை போட்டு கொண்டிருந்தால் கூட அவர்களை சமாதானம் செய்ய செல்லாதீர்கள். நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய மாற்றங்கள் ஏற்பட போகின்றது. தொலைபேசியின் மூலம் நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். சொந்த தொழிலில் வரக்கூடிய பிரச்சினைகள் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பமாகத்தான் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றம் வரும். இருப்பினும் குழப்பங்களை சமாளித்து தெளிவான முடிவை எடுப்பதற்கான சக்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு கொடுப்பான். மன தைரியத்தோடு போராடுங்கள். வெற்றி நிச்சயம் உங்களுக்கே. குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதியதாக நிறைய பாடங்களை கற்றுக் கொள்ளக்கூடிய அனுபவங்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் புதிய முதலீட்டை செலுத்தலாம். வி ஐ பி களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாகத்தான் இருக்க போகின்றது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக பேசுங்கள். முன்பின் தெரியாதவரிடம் பழகாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினத்துடன் நட்பு கூடவே கூடாது. பயணங்களின் போது கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாகத்தான் இருக்க போகின்றது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்க போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் போட்டிகளும் பொறாமைகளும் பிக்கல் பிடுங்கல்களும் இருக்கத்தான் செய்யும். சமாளித்துக் கொள்ளுங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிரி தொல்லை விலக போகின்றது. நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனக்குழப்பத்தில் இருந்து வெளிவந்து உங்களுடைய வாழ்க்கைக்கு எது தேவையோ அதற்கு சாதகமான முடிவை எடுக்க போறீங்க. பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு எதிலும் காலை வைக்காதீர்கள்.