மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகள் அடங்க இருக்கிறது. உங்களை தேடி வரும் வாய்ப்புகளை விட்டு விட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே புதிய ஒற்றுமை பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. அலட்சியம் பல இடங்களில் அவமானத்தை தேடி தரும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் தேவைகளை அறிந்து முயற்சிகளை செய்வது நல்லது. மற்றவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும் இதனால் டென்ஷன் கொள்ள தேவையில்லை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிய விஷயங்களை பார்க்க இருக்கிறீர்கள். தேவையற்ற குழப்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு மகிழ்ச்சியுடன் இருக்கப் போகிறீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக போட்டியாளர்களை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கற்பனைக்கு எட்டாத சில விஷயங்களை நீங்கள் செய்ய துணிவீர்கள். மற்றவர்களை நினைத்து பொறாமை படாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய எல்லா ரகசியங்களையும் உளறி கொட்ட வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ஏற்றம் இருக்கும், இதனால் உங்களுடைய தேவைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை முடிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விடாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களை நீங்களே தாழ்வு மனப்பான்மையுடன் அணுகாதீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. காரண காரியம் இல்லாமல் நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொது இடங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரிவுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களில் உங்களுடைய நேரத்தை செலவிடாமல் இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்குபவர்களுக்கு அனுகூல பலன் தரும் அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் ஏற்றம் காணலாம். வியாபார விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேடி வந்தவர்களுக்கு அதிருப்தியை உண்டாக்காதீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களை சமாளிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய யுக்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை உணர்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெடுநாள் கனவுகள் நிறைவேறும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தீராத கோபத்தை தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை மாற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் இதனால் உங்களுடைய வேலை பளு கூடும்.