மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நல்ல பலன் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் வெற்றி அடைய கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் இதனால் புதிய வாய்ப்புகளும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. பயணங்களில் இனிமை உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது எனவே மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய சிறு சிறு விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதுமைகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணம் அலைச்சல் ஏற்படுத்தும். கணவன் மனைவி அன்பில் அக்கறை தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகமாக சுமக்க கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மனக்கவலை நீங்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். புதிய பொறுப்பு சுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் இணக்கமான நட்பு ஏற்படும். சிலருக்கு சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு உத்வேகத்தையும் காண்பிப்பீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெற்றுக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்கள் குறுக்கு வழியில் சிந்திக்காமல் இருப்பது நல்லது. மனோதிடம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து அனுகூலமான பலன்கள் கிடைக்க போகிறது. பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க கூடிய தருணங்கள் அமையும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பல நாள் போராட்டம் வெற்றியடைய போகிறது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை ஆறப் போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். ஆரோக்யம் சீராகும்