மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் மேலும் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்த விஷயங்கள் நினைத்தபடி நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பங்குதாரர் உடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மையான எண்ணங்கள் வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சச்சரவுகளையும் நீக்கிக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படும். சுய தொழில் மந்த நிலை காணப்பட்டாலும் பிரச்சினை எதுவும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் வலுவாகும். கணவன் மனைவி பிரச்சனை முறை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மூன்றாம் மனிதர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத நாளாக இருக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களைக் காணலாம். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் காலதாமதமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதால் நிதானம் தேவை. சுய தொழிலில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் விளக்கம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை உற்சாகத்தை தரும் வகையில் அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணியில் கூடுதல் அக்கறை ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் மேம்படும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய நினைவுகள் வந்து செல்லும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றிய பேச்சு வார்த்தையை வெளியிடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் எழும் குழப்பம் இதற்கான விடையை தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை முன் நின்று நிதானமாக சொல்லுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பணிகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. அருளுடன் இருந்து வந்த மனக் கஷ்டங்களை நீக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு தைரியம் பிறக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும்.