மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிரிகளின் தொல்லை வரலாம் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவது வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓரளவிற்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கக் கூடிய அற்புதமான அமைப்பாக இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சுயமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல விஷயங்கள் அமைய பெறக்கூடிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர கூடுதல் முயற்சியை கொடுப்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். தேவை இல்லாத வெளியிட பயணங்களை தவிர்க்கவும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உத்வேகத்துடன் செயல்பட கூடிய அற்புதமான அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சி இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூரில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் சிக்கனுடன் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் மேலும் வழுவடையாமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முழு உழைப்பைக் கொடுப்பது நல்லது. உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்பட கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றிய புரிதல் ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நிதானமாக செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிட்டும். புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பதால் விழிப்புணர்வு தேவை. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் புதுமையான முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி காணலாம்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினருடன் சுப காரிய விஷயங்களில் செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதிற்குப் பிடித்தவர் மூலம் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து மறையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலன் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. கடினமான காரியங்களைக் கூட எளிதாக சாதித்து காட்ட கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த நாள் உங்களுடைய மறைமுக எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதாக முறியடித்து வெற்றிகாண கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிகார ரீதியான விஷயங்களில் சற்று கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும். வியாபார ரீதியான நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார்? கெட்டது செய்பவர்கள் யார்? என்பதை இனம் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் அமையும். வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.