மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முடிவுகளில் வெற்றி கிடைக்க கூடிய இனிமையான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை கூடும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும் என்பதால் மனக்குழப்பம் நீங்கி புது பொலிவுடன் காணப்படுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயமுயற்சி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் பராமரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு இறைவழிபாடு மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை பெற்று எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து பிரச்சினைகள் ஏற்படலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் பட்டதை பேசி விடுவதை தவிர்ப்பது நல்லது. பேசும் வார்த்தையில் இனிமை தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமையுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் தொகை கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சி வெற்றிகரமாக அமையும். எந்த ஒரு முக்கிய முடிவையும் சற்று தள்ளிவைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தேவையற்ற முன்பின் தெரியாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இணக்கம் தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் தேவை. அலட்சியம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே பனிப்போர் நீங்கும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். பெண்களுக்கு நிதானம் தேவை.