மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் யாரிடமும் முன் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையில்லாமல் எவருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத விஷயங்களை சந்திக்க இருக்கிறீர்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேரடியாக எதையும் எதிர்கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மற்றவர்களை எதிரியை போல் நினைக்காமல் இருப்பது நல்லது. கண்ணுக்குத் தெரியாத நல்ல சக்திகள் உங்களை உடனிருந்து பாதுகாக்கும். கணவன் மனைவி உறவு கொள்வது இருக்கும் சிக்கல்கள் மெல்ல மெல்ல விடுபடும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிடுசிடுவென மற்றவர்கள் மேல் எரிந்து விழாமல் இருப்பது நல்லது. முன்கோபம், முன் வினை பிரச்சனை போன்றவற்றை சகித்துக் கொள்வது உத்தமம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன்களை பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கண்ணால் பார்ப்பதை வைத்து எதையும் தீர்மானிக்க வேண்டாம், தீர விசாரிப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த செயல்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதையும் தட்டி கழிக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. வார்த்தைகள் பிரயோகிப்பதில் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைய வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதனைகளை படைக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. எதையும் அதன் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுயமரியாதையை இழந்து எதையும் பெற வேண்டிய அவசியம் இல்லை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையில்லாமல் எவருக்கும் ஜாமின் கையெழுத்து போடாதீர்கள். சொந்த ரத்தமாக இருந்தாலும் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சொன்ன சொல்லிலிருந்து பின் வாங்க வேண்டாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய அறிவுடன் சிந்திப்பது நல்லது. மற்றவர்களின் கருத்துக்களை புறக்கணிக்கவும் செய்யாதீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழில் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.