மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி அடையும். வேண்டிய வேண்டுதல் பலிக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் உள்ள நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே நல்லுறவு நீடிக்க அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுத்த கரியங்களில் பல தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்க வாய்ப்பு உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்புள்ள நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் ஊடல்கள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொல்லும் சொல்லில் இனிமை தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிலரிடம் போராட வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமூக அந்தஸ்த்து அதிகாரிக்கும். இறை வழிபாட்டில் கூடுதல் கவனம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் புது சிந்தனைகளை வெளிக்கொணர்வீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கும். புதிய செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவை காட்டிலும் வீண் செலவுகள் வரலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் புது மாற்றங்கள் நிகழும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் ஏமாற்றங்களை சந்திக்க வைப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களுடன் இருந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் வெற்றியாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் புதிய சுப பேச்சு வார்த்தைகளை நடத்த வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கி புது தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய கனவுகளை வளர்த்து கொள்ள கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் வீண் வார்த்தைகளை அவசரபட்டு விடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஓய்வு தேவைப்படக் கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனாவசிய எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப விஷயத்தில் பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த ஆசைகள் நிறைவேறுவதில் இடையூறுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் பொறுப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்க போகிறது. பிறர் பேச்சை கேட்டு எந்த முக்கிய முடிவையும் எடுக்காதீர்கள். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாக உயர வாய்ப்பு உண்டு. புதிய நட்பு மலரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனித் திறமைகள் வளரும். எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் தரக் கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிராளிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொலிவுடன் காண கூடிய இனிய நாளாக இருக்க போகிறது. குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிரடி திருப்பங்கள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் மூலம் புதிய விஷயங்களை கற்கும் அமைப்பாக இருக்கிறது.