இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
எரிபொருள் இன்மையாலே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் எனவும் அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.