பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியபோதே அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மொட்டு கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் அமரகீர்த்திக்கு, அடுத்த இடத்தை ஜகத் சமரவிக்ரம பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை அமரகீர்த்தி அத்துகோரள கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.