நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (2023.12.06) கைப்பற்றினர்.
இந்திய மீனவர்கள் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.