இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர்.
3 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் 20 வீரர்களும், 12 அதிகாரிகளும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அதன்படி, இலங்கை அணி இன்று மாலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல். 143 விமானம் மும்பைக்கு புறப்பட்டது.