கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை முற்றாக தடைப்பட்டுள்ளது அறியமுடிகிறது.
அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனால், மக்களை மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.