ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.
தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நேற்றையதினம் (21-02-2024) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ஓட்டங்களையும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மதீஷ பத்திரன மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை, பாத்தும் நிஸ்ஸங்க உபாதை காரணமாக வௌியேறிய நிலையில் 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில்முகமது நபி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இருப்பினும், 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.