வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை உதாசீனம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு பொதுமக்கள்ஆபத்தை உணராது புகையிரம் வரும் வேளையில் புகையிரத பாதுகாப்பு கடவையில் பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்துவருவதாக சுட்டிக்காடப்பட்டுள்ளது.
அந்தவகையிஒல் வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதிகளை கடந்து செல்கின்றனர்.
அதோடு வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல், புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேசமயம் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் அப் பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவே:ளை நேற்றையதினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதி புகையிர கடவையில் இடம்பெற்ற விபத்தி, தந்தை மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.