கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலதிக விபரங்கல் வெளியாகவில்லை.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.