ஆசிரியர்களின் உடை முறைமையில் மற்றும் மாணவர்களின் சீருடை முறைமையில் எவ்வித மாற்றங்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆசியரியர்கள் புடவையையே அணிந்து வருகின்றனர்.
இஸ்லாமிய ஆசிரியைகள் சேலையை அணித்து தலைக்கு பர்தாவை அணிகின்றனர்.
இதுவரை ஆசிரியர்களின் உடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.
தமிழர்கள் கலாசாரம் அழிந்துவிடக்கூடாது என்பதிலும் சேலையே ஆசிரியைகளுக்கான உரிய உடை எனவும் அவர்கள் எடுத்துணர்தியதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆகையினால் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடை முறைமையில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்போவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதை பொருள் ஒழிப்பு மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 144 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆலோசனை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.