அமெரிக்காவில் உள்ள கடற்கரை ஒன்றில் அலையில் அடித்துவரப்பட்ட இரும்புப் பெட்டி ஒன்று அமெரிக்கர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
டெக்சாஸில் உள்ள கடற்கரை ஒன்றில், அலையில் அடித்துவரப்பட்ட பணம், நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைக்க பயன்படுத்தும் இரும்புப் பெட்டி ஒன்றை 49 வயதான Jace Tunnell என்ற அமெரிக்கர் கண்டெடுத்துள்ளார்.
ஏதோ பொக்கிஷம் கிடைத்துள்ளது என எண்ணிய குறித்த நபர், அதனுள் தங்கம், பணம் ஏதாவது இருக்கும் என்று எண்ணி, அதைத் திறக்க முயன்றுள்ளார்.
எனினும், அவரால் அதைத் தூக்கமுடியாததால், தன் மகன் உட்பட 3 பேரை வரவழைத்துள்ளார் Jace.
எவ்வளவோ முயன்றும் அந்தப் பெட்டியைத் திறக்கமுடியாததால், மின்சார அரம் கொண்டு அதை வெட்டித் திறந்துள்ளார்கள்.
இருப்பினும், திறந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. காரணம், அந்தப் பெட்டிக்குள், ஈரப்பதத்தை அகற்றுவதற்கு பயன்படும் சிலிக்கா ஜெல் அடங்கிய பாக்கெட் ஒன்று மட்டுமே இருந்துள்ளது.
எனினும், பெரிதாக ஏதோ கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தாலும், தன்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை என்று கூறி விழுந்து விழுந்து சிரித்துள்ளார் Jace.