அலுவலக தொடருந்துகள் இன்று காலை இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை தொடருந்து சாலை கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றைய தினம் 80க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் ரத்தானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை தொடருந்து சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.