அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசாங்கம் 275,000 ஹெக்டேர் நெற்செய்கைக்காக மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் வெற்றிகரமாக செய்கை செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
நெல் கொள்வனவு செய்வதற்கு இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுகிறது மற்றும் இரண்டு அரச வங்கிகள் ஊடாக ரூபா 250 மில்லியன் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் மேலும் ரூ.300 மில்லியன் கிடைக்கும். இரண்டு அரச வங்கிகளில் இருந்து தொகையைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.