இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.
அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள்
வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இவ்வருட இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதற்கமைய அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.