உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.
29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.. (அரசாங்க தகவல் திணைக்களம்)