கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற நாசகார நடவடிக்கைகளின் விளைவாக சொத்து சேதங்களுக்கு உள்ளானவர்களுக்கு முறைப்பாடு செய்யும் கால அவகாசம் ஜூலை 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரை நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற தீ, கொள்ளை, கொலைகள், தனிநபர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜூன் 01ஆம் திகதி நியமித்தார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான விசாரணைக் குழுவில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க மற்றும் மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ். வசந்த குமார அடங்கியுள்ளனர்.
இதேவேளை, ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக புவனேக ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.