தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விதம் அவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விலையில் முதலமைச்சர் விஜய் சபையில் பகிரங்கமாக மன்னிபு கோரியமை அரசியல் வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
சட்டப்பேரவையில் அவர் உரையாற்றிய போது, முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை விமர்சித்து கருத்துகளை முன்வைத்துத் விமர்சித்தார்.
கருணாநிதியின் பெயரை விமர்சித்து கருத்து
மேலும், கடந்த கால தேர்தல்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை குறித்து அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்துத் தி.மு.க உறுப்பினர்களை விமர்சித்து பேசினார்
அமைச்சர் பேசிய இந்த பகுதி அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பேரவைத் தலைவர் உடனடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவரின் பெயரை சுட்டிக்காட்டி அமைச்சர் அவ்வாறு பேசியது தவறுதான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
மேலும், விதி 110-ன் கீழ் அறிவிப்புக்கு முன்னர் பேசிய அவர், அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பில் தான் அவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
முதல்வரின் இந்த தெளிவான மற்றும் பக்குவமான அணுகுமுறை உடனடியாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது

