நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் தொடர்பில் எந்தவொரு அறிவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் நேற்றைய உரையின் ஊடாக அவருக்கு எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பியுன் ஒருவருக்கு இருக்க வேண்டிய அறிவு கூட இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்