அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேலைக்கு செல்வோருக்கான புகையிரத பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.