இன்று (11) முதல் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துாவ தெரிவித்தார். அந்தவகையில்,
“இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொலிஸ் அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், அந்த சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், குறிப்பாக வீதி மறியல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்றால், கடுமையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியிருந்தால், அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் ஊடாக இராணுவத்தினரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.