மீண்டும் தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அதன்படி தேர்தலில் போட்டியிடாது தியானத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பல கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் ரத்ன தேரர் , தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வந்தவர் ஆவார்.
அத்துடன் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு செல்வதற்காக கட்சியுடன் கடும் மோதல்களிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது