இலங்கையில் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட அதிகூடிய வரியை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நேற்று செலுத்த நேரிட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டத் திருத்தத்திற்கு அமைய, 1 இலட்சம் ரூபாவிற்கு மேல் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு பெறும் அனைவரும் 6 வீதத்தில் இருந்து 36 வீதம் வரை வரியை செலுத்த வேண்டியுள்ளது.
வங்கிகளின் வட்டி வீதம்
அத்துடன் , வங்கிகளின் வட்டி வீதமும் 30 வீதத்தை விட அதிகரித்துள்ளது. அதேவேளை ஏற்கனவே பெறப்பட்டிருந்த கடனுக்கான வட்டியையும் சில வங்கிகள் அண்மையில் அதிகரித்தன.
இதனை தவிர 3 வீத தேச நிர்மாண வரியையும் மக்கள் செலுத்துகின்றனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் 202 ரூபாவாக இருந்த டொலர் ஒன்றின் இன்றயை பெறுமதி 371 ரூபாவாகும். இதற்கு இணையாக வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன.
மக்கள் இவ்வாறு பல அழுத்தங்களை சந்தித்துள்ள நிலையிலேயே ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு பெறுவோரிடம் அரசாங்கம் வரி அறவிடுகின்றமாய் குறிப்பிடத்தக்கது