அதிகளவான வெள்ளை அரிசி சாப்பிடுவதால் இதயம் சம்மந்தமான மற்றும் உடல் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் சாப்பிடுவது இதயத்திற்கு பல ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரிசி சார்ந்த உணவுகளை அதிகளவில் உண்பவர்கள் அதனை உண்ணும் அளவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் இல்லாவிட்டால் பல யூதனால பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
ஆபத்து
பொதுவாக சர்க்கரை இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது சர்க்கரை எவ்வளவு ஆபத்தை விளைவிக்கின்றதோ அதேயளவு அரிசியும் ஏற்ப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதிகப்படியான செயற்கையான இனிப்பு சுவையூட்டப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் அரிசி உணவுகள் சாப்பிடுபவர்கள் அடிக்கடி இதய ஆரோக்கியத்தை பரிசோத்தித்து கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை எடுத்டுகொள்வதால் கரோனரி தமனி நோய் (பிசிஏடி) ஏற்படும் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் மரணத்திற்கான திறவுகோலாகும். இனிப்பு அல்லது எண்ணெய்யில் செய்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்தை விட இந்நோய் அதிகப்படியான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடுவதை காட்டிலும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.