பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ´பிக்பாஸ்´ நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்.3 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிகொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது சீசனின் போட்டியாளர்கள் அறிமுகம் வருகிற அக்.3 மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்தத் தொடரிலும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த முறைப் போட்டியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்கிற எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.