ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குத் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துக்கொண்டனர்.
ராஜித சேனாரத்னவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பு
அரசாங்கத்தில் இணையவுள்ளதாக பேசப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
இதனடிப்படையில் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹேரத், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளோ ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளனர்.