ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.