உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும் போது அதன் உணவு மூலமாகவும் சப்ளிமெண்ட் மாத்திரைகள் வடிவிலும் அதனை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
வைட்டமின்களை அதிகமாக உட்கொண்டால் நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகப்படியான விட்டமின் ஏ மாத்திரைகள் காரணமாக நச்சுத்தன்மை, அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஆகியவை ஏற்படலாம்.
இது வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் மாத்திரைகள் அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படும். இதற்கான அறிகுறிகளில் வாந்தி , உள்விழி அழுத்தம் ஆகியவை அடங்கும்.
ஆபத்துக்கள்
வைட்டமின் B3 நியாசின் என்றும் அழைக்கப்படுகிறது. நிகோடினிக் அமிலமாக எடுத்துக் கொள்ளும் நிலையில் நியாசின் தினமும் 1-3 கிராம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதிக ரத்த அழுத்தம், வயிற்று வலி, பார்வை இழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி6 பைரிடாக்சின் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு அதிகப்படியான அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது கடுமையான நரம்பியல் அறிகுறிகள், தோல் புண்கள், ஒளியின் உணர்திறன் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வைட்டமின் B9 ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு சப்ளிமெண்டாக அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் மன ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும்.
வைட்டமின் பி 12 ஐ அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும், அது சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேறும். இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும்