தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான்.முருகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளலுக்கு முருகன் கைகளில் இருக்கும் வேலுக்கும் இந்து மதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இருப்பதில்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தையும் அதன் சக்தியையும் எடுத்துக்காட்டுகின்றது.
பண்டையத் தமிழர்கள் வேலை ஆயுதமாகப் பயன்படுத்தினர். “வெற்றிவேல், வீரவேல்” என்பது அக்காலத்துப் போர்க்களங்களில் கூட முழக்கமிடப்பட்டது. காரணம் வேல் ஒரு பாதுகாப்பு கவசமாக தொன்று தொட்டு பார்க்கப்படுகின்றது.
இந்துக்களின் பெயர்களில் சக்திவேல், ராஜவேல் பழனிவேல் போன்ற வேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன், வேலப்பன், என்ற பெயர்களும் அதிகமாக வைக்கப்படுகின்றது