பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள்தான் கறிவேப்பிலை.
உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
மருத்துவ குணங்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், தொப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நோய் குணமாகும். மேலும் கறிவேப்பிலை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.
சளித் பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
இதனால் சுவாசம் சீராக இடம்பெறும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் துணைப்புரிகின்றது.
இவ்வாறு அலப்பரிய நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை அலட்சியப்படுத்தாமல் தினசரி பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அளப்பரிய நன்மை பயக்கும்.