கடுமையான கோடைகால வெப்பம் காரணமாக உடலில் உஷ்ணம் அதிகமாகும்.
நீர்க்கடுப்பு, சோர்வு. அதிகமான வியர்வை
கோடை காலம் தொடங்கிய பின் மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை சரும நோய்கள், நீர்க்கடுப்பு, சோர்வு, அதிக வியர்வை வெளியேறுவதால் சிலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.
உடலை நீரேற்றமாக வைத்திருக்காவிட்டால் அதனாலும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே கோடை வெய்யிலில் இருந்த தப்பிக்க இவற்றை செய்தால் போதும்.
என்ன செய்யவேண்டும்?
தினமும் காலை 5 சின்ன வெங்காயம் சாப்பிடுங்கள். இது வெயில்கால நோய்க்கு நல்ல மருந்து. மதிய உணவுடன் (எந்த உணவாக இருந்தாலும்) 2 சின்ன வெங்காயம் சேர்த்து உண்ணலாம்.
கோடைகாலங்களில் பழையசோற்று நீச்ச தண்ணீரும் சின்ன வெங்காயமும் உடலுக்கு அவ்வளவு நல்லது. கற்றாழை அல்லது எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும்.
வெயில்கால நோய்களை கிட்ட அண்டவிடாமல் ஆரோக்கியமாக இருக்க வாரம் 2 முறை நல்லெண்ணெய் குளியல் போடுவது நல்ல பலன் தரும்.
வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகியவை குளிர்ச்சி தரும். இவற்றை தண்ணீரில் போட்டு அதிகாலையில் குடிக்கலாம்.
நீங்கள் வெயிலில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழப்புக்கு காரணமாகிவிடும். அதனால் வெளியே செல்லும்போது தண்ணீர் கொண்டு போக மறக்கவேண்டாம்.
எப்போதும் கையில் எலுமிச்சைப் பழத்தை வைத்து கொள்ளுங்கள். இதனை பிழிந்து நீருடன் அருந்துவதால் நீரிழப்பு சரியாகும்.
வாழைப்பழம், கரும்புச்சாறு, நுங்கு, இளநீர்,வெள்ளரிக்காய், ஆகியவை வெயிலுக்கு நல்லது. இதனால் தலைசுற்றல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்.
கோடைக் காலத்தில் அசைவம், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும்.
நீர்ச்சத்து நிரம்பிய பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி மாதிரியான காய்களை சமைத்து சாப்பிட்டால் உடல் குளுமையாக இருக்கும்.