காதலனுடன் காட்டுப்பகுதிக்கு சென்ற சிறுமியை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில், Meerut மாவட்டத்தில் Falawda காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி அவசர உதவி எண்ணிற்கு அழைத்து, தன்னை காப்பாறுமாறு பொலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் Falawda பொலிஸ் விரைந்து சென்று, ஒரு விவசாய நிலத்தில் மயங்கிக் கிடந்த சிறுமியை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ உதவிக்காக்கவும் பரிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பெற்றோர்கள் பொலிஸாருக்கு அளித்த புகாரில், தங்களது 14 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 4 பேர் சேர்ந்த கும்பல் கடத்தியதாக கூறியுள்ளனர்.
பின்னர் சிறுமையை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்துள்ளதாகவும், அரை மயக்கத்தில் கிடந்த சிறுமையை அங்கேயே விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களின் பெயர்களையும் பொலிஸிடம் தெறிவித்துள்ளார்.
ஆனால், பொலிஸார் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் கூறிய பதில் வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.சிறுமி தனது காதலனுடன் காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும், அப்போது தான் சிலர் வந்து தன்னை இவ்வாறு செய்தாக கூறியுள்ளார்.
சிறுமியின் அறிக்கையை பொலிஸார் பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் காதலன் குறித்தும், இது திட்டமிட்ட சதியா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.