செம்பருத்தி விலைமதிப்பற்ற சக்திவாய்ந்த மூலிகை ஆகும். இது மால்வேசி குடும்பத்தின் ஒரு பகுதியாகும். செம்பருத்தி வகைகளில் 300 க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் ரோசெல்லே அல்லது ரெட்சோரல் என்று அழைக்கப்படும் நாம் வழக்கமாக பார்க்கும் பயன்படுத்தப்படும் செம்பருத்தி ஆயுர்வேதத்தில் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளது.
ஆயுர்வேதத்தில் செம்பருத்தியின் நன்மைகள் எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
செம்பருத்தி இரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும். செம்பருத்தி தேநீராக்கி குடிப்பதன் மூலம் உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். உயர் இரத்த அழுத்தம் நாளடைவில் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதை பலவீனப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது.
கல்லீரல் செயல்பாடுகள் பலவும் உள்ளன. இது புரதங்களை உற்பத்தி செய்தல், பித்தத்தை சுர்ப்பது கொழுப்பை உடைப்பது என உடலில் முக்கியமான பல்வேறு செயல்களை செய்கிறது. இது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானவை. செம்பருத்தி கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்வதோடு கல்லீரலை திறம்பட செயல்பட வைக்கவும் உதவுகிறது.
செம்பருத்தி செடி இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கலாம். நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுடன் செம்பருத்தி சப்ளிமெண்ட் எடுத்துகொண்டால் இரத்த குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். செம்பருத்தி செடி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாகவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாகவும் அறியப்படுகிறது. இது ஹைப்பர் கிளைசீமியாவை நிர்வகிக்க உதவும். ஆனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பவர்கள் செம்பருத்தி சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
உடலில் பித்ததோஷம் அதிகரிப்பதே காரணம். பித்த தோஷத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த செம்பருத்தி உதவுகிறது. மாதவிடாய் வயிறு வலி மற்றும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செம்பருத்தி எடுக்கலாம்.
முறையற்ற உணவு, நீர், சுற்றுச்சூழல், நச்சுகள், மன அழுத்தம் மற்றும் பலவீனமான செரிமான தீ காரணமாக சொல்லப்படுகிறது. வாதம் மோசமாவதே இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த மோசமான வாத உடலில் இருந்து பல்வேறு திசுக்களில் இருந்து குடலில் திரவத்தை கொண்டு வந்து மலத்துடன் கலப்பதால் மலம் தளர்வான நீர் இயக்கங்களுடன் வயிற்றுப்போக்கு உண்டு செய்கின்றன. வயிற்றுப்போக்கு பாதிக்கப்படும் போது செம்பருத்தி தேநீர் உணவில் சேர்ப்பது உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த செய்யும்.