கூடிய விரைவில் தேர்தலொன்றுக்குச் செல்ல தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற “நாடு முழுவதும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு” எனும் கருத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் “இன்று அல்லது நாளை தேர்தல் நடத்தப்படுமாயின் அதற்கும் விருப்பம். எமது உதாரண புருஷரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அதற்கே பிரியப்படுகிறார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதை தடுப்பதற்காக கடந்த அரசாங்கம் சட்டத்தை ஆக்கியுள்ளமையால் மேற்படி தேர்தலில் சீக்கிரமாக நடத்த முடியாதுள்ளது எனவும், அதன் பின்னர் நடத்தக்கூடிய தீர்த்தல் ஒன்றுக்கு தயார் எனவும் நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எந்தவொரு தேர்தலுக்காகவும் தயாராக அவசியமான நடவடிக்கை என்ற வகையில் எதிர்வரும் 09ஆம் திகதி தொடக்கம் பிரச்சார கூட்டங்களை நாடாத்துதல் அனுராதபுரத்தில் இருந்து தொடங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.